Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஏப்ரல் (ஹி.ச,.)
சந்திரபாபு நாயுடு 2024 ஜூன் மாதம் ஆந்திரப் பிரதேசத்தின் 18-வது முதலமைச்சராக நான்காவது முறையாகப் பதவியேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்கள் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது,
ஆந்திரப் பிரதேசத்தின் கடின உழைப்பாளி முதலமைச்சரும், எனது நல்ல நண்பருமான திரு. சந்திரபாபு நாயுடு காரு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
அவரது தலைமையின் கீழ், ஆந்திரப் பிரதேசம் அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்ற உயரங்களை எட்டி வருகிறது. மக்கள் சேவையில் அவர் நீண்ட ஆயுளும், நல்ல உடல்நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b