Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு , 20 ஏப்ரல் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள ககோர் கிராமப்பகுதியில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்து பலத்த சேதமடைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA