கள்ளக்காதலன் உதவியுடன் கணவர் கொலை - மனைவி உள்பட 2 பேர் கைது
பெங்களூரு , 20 ஏப்ரல் (ஹி.ச.) மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர்நேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (வயது 38). கூலி தொழிலாளியான இவர், மேஸ்திரியான சித்தேஷ் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி ஜவரப்பா சாலையோரத்தில் கா
B


பெங்களூரு , 20 ஏப்ரல் (ஹி.ச.)

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர்நேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (வயது 38).

கூலி தொழிலாளியான இவர், மேஸ்திரியான சித்தேஷ் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி ஜவரப்பா சாலையோரத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளத்தொடர்புவிசாரணையில், ஜவரப்பா தனது மனைவி அம்ருதாவை மேஸ்திரி சித்தேஷுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

இருவரும் செல்போனில் ரகசியமாக பேசி வந்ததுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் ஜவரப்பாவுக்கு தெரியவந்ததால், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டு கொலைகள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ஜவரப்பாவை தீர்த்துக்கட்ட அம்ருதாவும், சித்தேஷும் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று சித்தேஷ், ஜவரப்பாவை காரில் அழைத்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிகளவு மது குடிக்க வைத்துள்ளார்.

பின்னர் மயக்கமடைந்த ஜவரப்பாவை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு விபத்து நடந்தது போல் காட்ட, உடலை சாலையோரத்தில் வீசி சென்றுள்ளார்.

ஜவரப்பாவின் செல்போன் விவரங்களை ஆய்வு செய்த போலீசார், அம்ருதா மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணவரை சித்தேஷுடன் சேர்ந்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அம்ருதா மற்றும் சித்தேஷை போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA