பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு – அண்ணன் தீவிர சிகிச்சையில் அனுமதி
கேரளா, 20 ஏப்ரல் (ஹி.ச.) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாலக்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகனான பத்து வயதான அனோஜ்மற்றும் இரண்டாவது மகன் எட்டு வயதான ஆல்ஜோ சம்பவத்தன்று இருவருக்கும் உடல் நலம் சர
பாம்பு


கேரளா, 20 ஏப்ரல் (ஹி.ச.)

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாலக்குடி பகுதியை சேர்ந்த

தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகனான பத்து வயதான அனோஜ்மற்றும் இரண்டாவது மகன் எட்டு வயதான ஆல்ஜோ சம்பவத்தன்று இருவருக்கும் உடல்

நலம் சரியில்லாமல் காணப்பட்டது.

இருவரும் அவகோடா ஜூஸ் குடித்த காரணத்தினால்

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என பெற்றோர்கள் சந்தேகம் அடைந்தநிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரின் ரத்த

மாதிரிகளை சோதனை செய்தபோது இருவருக்கும் விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அண்ணன் தம்பி

இருவரில் தம்பி எட்டு வயதான ஆல்ஜோ தற்போது உயிர் இழந்துள்ளான்.

மூத்த மகனான

அனோஜ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான், அவர்கள் வீட்டில் பெற்றோர்கள் சென்று பார்த்த போது இருவரும் உறங்கிக் கொண்டிருந்த

தலகாணி அடியில் பாம்பு ஒன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஷப்பாம்பு என தெரிய வந்த நிலையில் தற்போது அதற்கு ஏற்றவாறு சிறுவனுக்கு சிகிச்சை

அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரை

பாம்பு கடித்த நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை

ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P