Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வர், 20 ஏப்ரல் (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் 75-வது மிஸ் இந்தியா-2026 அழகிப்போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் மொத்தம் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடுமையான போட்டியில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, கோவாவை சேர்ந்த சாத்வி சதீஷ் சைல் மிஸ் இந்தியா-2026 பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் சர்வதேச அளவிலான அழகிப்போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ராஜ்நந்தினி பவார் 2-வது இடத்தையும், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீ அத்வைதா 3-வது இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற பின்னர் சாத்வி சதீஷ் சைல் கூறுகையில்,
இது கனவு போல உள்ளது.
உலக மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமை என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA