மத்திய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது - செல்வப்பெருந்தகை
காஞ்சிபுரம், 20 ஏப்ரல் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூரில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருட
செல்வப்பெருந்தகை


காஞ்சிபுரம், 20 ஏப்ரல் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூரில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வீரபாண்டியன் உட்பட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது;

நான் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல்வர் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியிருந்தாலும், அதையும் தாண்டி கூட்டணி பெரிய வெற்றி பெறும். தொகுதி மறுவரை தோல்விக்குப் பிறகு மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

அது பிரமாண்டமான வெற்றியாக மாறும் என்றார்.

மேலும், ஒரு வேட்பாளராக நான் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது.

காலை முதலே மொழி தெரியாதவர்கள் எனது வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.

ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். திமுக ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வீட்டில் நுழைந்து பீரோவை உடைப்பது, பெட்டிகளை கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் பாஜகவின் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கின்றனர் என விமர்சித்தார்.

மேலும், ஒன்றிய அரசு காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடத்தி வருகிறது. சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தலும், வேதனையும் ஏற்படுத்துகின்றனர்.

இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam