Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டத்திலும் சென்னையிலும் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் இன்று காலை 11.30 மணி முதல், விஜய் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து காரில் கிளம்பிய விஜய், பாதி வழியில் பிரசார வேனில் ஏறினார்.
வேனில் நின்றபடி இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார்.
அப்போது தவெக தொண்டர்கள் விஜய்க்கு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூருக்கு செல்லும் வழியில் புதிதாக திருமணமான ஜோடி ஒன்று விஜய்யை பார்க்க சாலையோரத்தில் காத்திருந்தது.
இதனை கவனித்த விஜய், அந்த ஜோடியை தனது வேனில் ஏற்றி வாழ்த்து கூறினார்.
விஜய் ரோடு ஷோ காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b