Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஏப்ரல் (ஹி.ச)
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜாமா மசூதி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 20 ) விசாரிக்க உள்ளது. சந்தௌசியில் உள்ள நீதிமன்றம் பிறப்பித்த கணக்கெடுப்பு உத்தரவை எதிர்து முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழக்கு பட்டியலின்படி, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரிக்கிறது.
முன்னதாக இருந்த கோயில் அமைப்பின் மீது மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பினர் கூறி வரும் நிலையில், கணக்கெடுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்து மசூதி குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையை தொடர இந்து மற்றும் முஸ்லிம் தரப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
முகலாயர் காலத்தில் இடிக்கப்பட்ட பழமையான ஹரிஹர் கோயிலின் இடிபாடுகள் மீது மசூதி உள்ளதாக இந்து தரப்பினர் கூறுகின்றனர்.
மறுபுறம், வழக்கின் விசாரணைக்கு உகந்ததன்மை குறித்து மசூதி குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன், கணக்கெடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முறைக்கும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பு வாதத்தை கேட்க போதிய வாய்ப்பு வழங்காமலும், சட்ட நெறிமுறைகளை மீறியும் கணக்கெடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மசூதி குழு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
சந்தௌசி விசாரணை நீதிமன்றத்தின் கணக்கெடுப்பு உத்தரவில் சட்டரீதியான குறைபாடு இல்லை எனக் கூறி, அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை உறுதி செய்தது.
மசூதி குழுவின் தடை கோரிக்கையையும் நிராகரித்ததை அடுத்து, மசூதி குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b