Enter your Email Address to subscribe to our newsletters

பேட்பூர் , 20 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் சென்ற டீக்கடைக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு அகிலேஷ் யாதவ் திடீரென சென்று டீ குடித்தார்.
பின்னர் அந்த கடை உரிமையாளரான இளைஞருடன் சகஜமாக பேசியதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் சென்றதாக கூறப்படும் அந்த டீக்கடைக்கு பின்னர் சென்ற அதிகாரிகள், அலுமினிய பாத்திரத்தில் டீ தயாரிப்பதாகக் கூறி கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டீக்கடை உரிமையாளர் ஆரியன், அரசியல் உள்நோக்கத்துடன் தனது கடை குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தனது வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாக கூறிய அவர், கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA