Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் ஏராளமான பாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்பட்டு வருவதாக எரியோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த வடுகம்பாடியை சேர்ந்தபீமராஜ் (வயது 41) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த 104 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Hindusthan Samachar / P YUVARAJ