விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம்
செங்கல்பட்டு, 20 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ் நடிகர் விஜய்மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. முன்னதாக,
விஜய் சங்கீதா


செங்கல்பட்டு, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ் நடிகர் விஜய்மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது.

முன்னதாக, தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்களது வழக்கறிஞர்கள் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பரஸ்பரமாக பேசி இணக்கப்பூர்வமாக பிரிவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை மேலதிக விசாரணைக்காக வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam