Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சோதனை குறித்து தெரிவித்த அவர், “தேர்தல் பணிகளில் ஈடுபட முடியாத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்னை முடக்கி வைத்துள்ளனர்” என்று புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனையில், அதிகாரிகள் அவரது இல்லம் உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனை நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெளியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் இப்படியான சோதனை நடைபெறுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / GOKILA arumugam