Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் அனலாக மாறி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி அன்று கொடைக்கானல் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b