மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
மதுரை, 20 ஏப்ரல் (ஹி.ச.) உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவின் 8-ம் நாள்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு - வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


மதுரை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ம் தேதி நடைபெற உள்ளது.

திருவிழாவின் 8-ம் நாள் (ஏப்ரல் 26) இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

அன்றிலிருந்து ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். ஒன்பதாம் நாள் (ஏப்ரல் 27) திக்கு விஜயம், 10-ம் நாள் (ஏப்ரல் 28) திருக்கல்யாணம் நடைபெறும்.

11-ம் நாள் தேரோட்டமும் 12-ம் நாள் (ஏப்ரல் 30) தீர்த்தவாரியும் நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் பகுதியில் கொட்டகை அமைப்பது மற்றும் தளங்களை சீர்செய்யும் பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த தண்ணீர் வைகை ஆற்றில் தடங்கல் இல்லாமல் செல்வதற்காக புதர்கள் மற்றும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அழகர் ஆற்றில் இறங்குமிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b