தீமைகளை அகற்றி, நல ஆட்சியை அமைப்போம் – அதிமுக-பா.ம.க கூட்டணிக்கு வாக்களிக்க அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னை, 21 ஏப்ரல் (ஹி ச.) வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், சாதாரண ஆட்சிப் போட்டியை விட மாநிலத்தை “தீமைகளிலிருந்து மீட்டெடுக்கும்” முக்கியமான தேர்தல் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி இரா
Anbumani


சென்னை, 21 ஏப்ரல் (ஹி ச.)

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், சாதாரண ஆட்சிப் போட்டியை விட மாநிலத்தை “தீமைகளிலிருந்து மீட்டெடுக்கும்” முக்கியமான தேர்தல் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தத் தேர்தல் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளதாக கூறிய அவர், வாக்காளர்கள் அறிவார்ந்தும் பொறுப்புடனும் சிந்தித்து தங்களது முடிவை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதே அதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கட்டுப்பாடின்றி பரவி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த தற்போதைய அரசு தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தோல்வி ஆகியவற்றை சுட்டிக்காட்டி, திமுக அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் முன்வைத்தார். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தடுக்கப்பட்டதையும் அவர் “பெரும் துரோகம்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, அதிமுக – பா.ம.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,

- போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகள்

- படிப்படியாக மதுவிலக்கு

- பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி

- வேளாண்மை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி

- கல்வி, சுகாதார மேம்பாடு

போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அதனால், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ