Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்ததற்கான சான்று என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, குற்றவாளிகளுக்கு சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சம் குறைந்துவிட்டதாகவும், இதனால் மாநிலம் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பு மற்றும் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ