முதல்வர் ஸ்டாலின் கண்ணகி நகரில் இன்று காலை நடைபயணத்துடன் தேர்தல் பிரச்சாரம்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை கண்ணகி நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தி
முதல்வர் ஸ்டாலின் கண்ணகி நகரில் இன்று காலை நடைபயணத்துடன் தேர்தல்  பிரச்சாரம்


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை கண்ணகி நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காலை நடைபயணம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த வாக்குசேகரிப்பில், ஏராளமான ஆதரவாளர்களும் உள்ளூர் பொதுமக்களும் திரண்டனர். வீதிகளில் கூடிய மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நேரில் சந்தித்து உரையாடினர். பலர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பிரச்சாரத்தின்போது கண்ணகி நகர் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது. கட்சிக்கொடிகளுடன் திரண்ட இளைஞர்கள், மகளிர் அணியினர், முதியோர் என அனைத்து தரப்பினரும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற காட்சிகள் காணப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால், தலைவர்கள் தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.

கண்ணகி நகர் பகுதி மக்களின் உற்சாக வரவேற்பு, திமுகவின் தேர்தல் பணிகளுக்கு கூடுதல் உத்வேகம் அளித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b