Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தவெக வேட்பாளர் மரிய வில்சன் மீது பண மோசடி குற்றச்சாட்டில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் விக்னேஷ் ராம், தனியார் கல்லூரிகளின் கேண்டீன்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், மரிய வில்சன் தொடர்புடைய ஜேப்பியார் கல்லூரிக்கு பல ஆண்டுகளாக மளிகைப் பொருட்கள் சப்ளை செய்து வந்ததாக கூறியுள்ளார்.
ஆனால், 2017 முதல் 2019 வரை வழங்கிய பொருட்களுக்கு உரிய தொகையான சுமார் ₹1.10 கோடி பணம் வழங்கப்படவில்லை என்றும், அதை கேட்டபோது மரிய வில்சன் தன்னை ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் விக்னேஷ் ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ