Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 21 ஏப்ரல் (ஹி.ச)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராமப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், சுய உதவிக்குழுவினர்களின் கோலப்போட்டி, ராட்சத பலூனில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள், முதல்முறை வாக்காளர்கள் மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, பொருநை அருங்காட்சியகத்திலிருந்து 2026-சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மினி மாரத்தான் போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (21.04.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மினி மாரத்தான் போட்டியானது பொருநை அருங்காட்சியகத்திலிருந்து திருமால்நகர் வழியாக பொதிகை நகர், ஜோஸ் ஸ்மார்ட் பள்ளி வழியாக சுமார் 3 கி.மீ வரை இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா உட்பட அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Hindusthan Samachar / vidya.b