Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்.
இந்த திருக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா நிகழ்ச்சி வெகு
விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரைத் பெருவிழா நிகழ்ச்சியில்
மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர்,
தேன், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம், தங்க சேவல் கொடி வேல், சிறப்பு ஆபரணங்கள் தங்கள் ஆபரணங்கள்
அணிவிக்கப்பட்டு மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனை நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
Lதூவாஜா ரோஹனம் நவகிரக சாந்தி பூஜை சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்ற நிகழ்வு
நடைபெற்றது.
இந்நிகழ்வில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் வெள்ளிக்கவசம் அலங்காரம்
அணிவிக்கப்பட்டு சிறப்பு தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீப ஆராதனை
நடைபெற்றது.
இந்நிகழ்வை தொடர்ந்து சித்திரை பெருவிழா நிகழ்ச்சி பத்து நாட்கள் நடைபெற
உள்ளது.
செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 21 ஆம் தேதி இன்று இரவு கேடய உலா உற்சவம் நடைபெற
உள்ளது.
இந்நிகழ்ச்சியில் காலை மற்றும் இரவு 10 நாட்களுக்கு சித்திரை பெருவிழாவில்
உற்சவர் முருகப்பெருமான் புலி வாகனம் தேர் வாகனம் யாலி வாகனம் வெள்ளி மயில்
வாகனம் போன்ற சேவைகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
ஏப்ரல் 28ஆம் தேதி இரவு மலைக்கோவிலில் தெய்வயானை முருகப் பெருமான்
திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியின் முக்கிய நாளாக நடைபெற
உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி, மற்றும்
திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam