இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசிய தவெக தலைவர் விஜய்..! இபிஎஸ் குறித்து காட்டமான விமர்சனம்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்ற தேர்தல் வரும் நாளை மறுநாள் (ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகள், அதி
விஜய்


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்ற தேர்தல் வரும் நாளை மறுநாள் (ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் சீமான், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தேர்தல் களத்தில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழகவெற்றிக்கழக தலைவர் விஜய் அடையாறு , சைதாப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .பின்னர் நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , மதசார்பற்ற கொள்கையிலிருந்து மாறப்போவதில்லை. இதில் 100% இந்த விஜய் நீங்கள் நம்பலாம் என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அரசியல் எதிரி திமுக கொள்கை எதிரி. பாஜக என்பதை தெளிவாக உள்ளோம் எங்கள் நிலைப்பாட்டில் இந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார்.எம்மதமும் நம்மதம் என்பதே என் முகம்; இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்களுக்கான ஆளாகத்தான் நான் இருப்பேன் . எல்லா மதமும் என் மதம்தான் என்று கூறினார்.

தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த விஜய், தைரியம் இருந்தால் எடப்பாடி தொகுதியை தாண்டி வேறு எந்த தொகுதியிலாவது போட்டியிட முடியுமா என கேள்வி எழுப்பினார். எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விஜய், பத்து தோல்வி அடைந்தவர் என எடப்பாடி பழனிசாமி குறித்து காட்டமாக விமர்சித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P