பாஜகவின் அடிமை யார் என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி - விஜய்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குழந்தைகள
விஜய்


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

குழந்தைகளிடமே தனித்துவமான கோரிக்கை வைத்தார்.

உங்களுக்கு பிடித்த விஜய் மாமாவுக்காக, உங்கள் அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த தேர்தல் மாற்றத்திற்கானது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியை விமர்சித்து பேசினார். வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 23ஆம் தேதி குடும்பத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும், தமக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த வகையில், குடும்ப வாக்குகளை பாதிக்கும் நோக்கில் குழந்தைகள் வழியாக பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam