Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தை ஏப்ரல் 21ஆம் தேதி கொண்டாட தீர்மானித்தது.
அதன்படி, முதல் உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை முன்னேற்றுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
புதிய யோசனைகளை பயன்படுத்தவும், புதிய முடிவுகளை எடுக்கவும், ஆக்கபூர்வமான சிந்தனையை செய்யவும் மக்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்தினம் 2001ஆம் ஆண்டு கனடாவின் டொராண்டோவில் நிறுவப்பட்டது.
அன்றைய நிறுவனர் மார்சி செகல் (Marci Segal) ஆவார்.
Hindusthan Samachar / Durai.J