Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
வாகை மரத்தின் முதிர்ந்த காயும், அதன் சலசலக்கும் ஓசையும் ஒரு சிறப்பாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கினால் இந்த மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும்.
வாகை மரமானது விதை, வேர்க்குச்சி, நாற்று போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது பலத்தண்டுகளையுடையதாகவும், பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது.
இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும்.
வாகை மரம் (Albizia lebbeck) மருத்துவக் குணங்கள்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உறுதியான மரப்பொருள் எனப் பன்முகப் பயன்களைக் கொண்ட ஒரு சிறந்த மரமாகும்.
இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை என அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.
தோல் நோய்கள், அழற்சி, இருமல், மற்றும் விஷமுறிப்பு போன்றவற்றுக்கு இது மருந்தாகிறது.
மேலும், இது நச்சுக்களை நீக்கிச் சூழலைத் தூய்மைப்படுத்துகிறது
தோல் நோய்கள்:
இலைகள் மற்றும் பட்டைகள் வீக்கம், கொப்புளங்கள், மற்றும் தோல் வியாதிகளைக் குணப்படுத்த மேல்பற்று மருந்தாகப் பயன்படுகின்றன.
சுவாசக் கோளாறு:
வாகை பூக்கள் மற்றும் பட்டைகள் இருமல், நுரையீரல் அழற்சி மற்றும் ஈறு அழற்சி சிகிச்சையில் உதவுகின்றன.
விஷ முறிவு:
பாம்பு விஷம் மற்றும் பிற நச்சுக்களை முறிக்கும் தன்மை வாகை மரத்திற்கு உண்டு.
சர்க்கரை நோய் மற்றும் மூலநோய்:
வாகை மரப்பொடியை வெண்ணெயில் கலந்து உட்கொள்வது மூலம் மூலநோய் சரியாகும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
பசி மற்றும் செரிமானம்:
பட்டைப் பொடியைப் பாலில் கலந்து குடிப்பது பசியை உண்டாக்கும்.
Hindusthan Samachar / Durai.J