Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 22 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள என்.எல்.சி. ஆபீசர் நகரில் வசித்து வரும் முகமது ரபியின் மனைவி முகமது சாராபீவி இன்று (22.04.2026) காலை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது அருகில் இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு சிலிண்டர் முற்றிலுமாக வெடித்து சேதமடைந்து வெளியே வீட்டிற்கு தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் சாராபீவி மற்றும் வீட்டில் இருந்த அவரது கணவர் முகமது ரபி இருவரும் பலத்த காயத்துடன் இடிபாடுகளுடன் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று இடிபாடுக்குகள் சிக்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் மீட்டு வடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீயணைப்புத்துறையினர் இரு சிலிண்டர்களையும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b