புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடும
Nn


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, வரும் 27 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை) முதல் 31 மே 2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும். விடுமுறை காலத்தில் மாணவர்களுக்காக எந்தவிதமான சிறப்பு வகுப்புகளோ அல்லது கூடுதல் வகுப்புகளோ நடத்தப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோடை விடுமுறைக்கு பிறகு 01 ஜூன் 2026 (திங்கட்கிழமை) அன்று அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

அதேசமயம், 27 ஏப்ரல் முதல் 30 ஏப்ரல் 2026 வரை வழங்கப்பட்ட விடுமுறை நாட்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் ஈடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ