Enter your Email Address to subscribe to our newsletters

போடி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் போடி சட்டமன்ற தொகுதி பெரியகுளம் பகுதியில் அகமலை ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கும் வாக்குப் பெட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.
குறிப்பாக போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 346 வாக்குச்சாவடிகள் இன்று வாக்குப் பெட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையா தலைமையில் அனுப்பப்பட்டு வருகின்றன.
மலை கிராமங்கள் ஆன காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் டாப் ஸ்டேசன் அகமலை பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாக வாக்குப் பெட்டி அனுப்பப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டி வாக்குப்பதிவு அலுவலர் வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப் பெட்டி குதிரை மூலம் அனுப்பப்பட்டது.
கடந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குப் பெட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரை மற்றும் கழுதை மூலமாக அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b