Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே பரபரப்பாக்கிய நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கராவதம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
கடந்தாண்டு, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் நாம் இழந்த அப்பாவி உயிர்களை இந்த நாளில் ஆழ்ந்து நினைவுகூர்கிறோம்.
நம் மக்களை இழந்த துயரமும் வலியும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இப்போதுவரை நிலைத்திருக்கிறது.
பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி.
இதற்கு எதிராக நாம் நிச்சயமாக ஒன்றிணைந்து, சண்டையிட்டுத் தோற்கடிக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிரான தனது சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா தொடரும் எனக் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P