Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், பாளையங்கோட்டையிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் சிலர், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாளையங்கோட்டை 7வது வார்டில் சிலருக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டதாகவும், பலருக்கு வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை” என குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து விளக்கம் கேட்டு வேட்பாளர் அப்துல் வகாப் வீட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P