Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 11 மணி வரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி , தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் வேட்பாளர்களாக திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b