Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 23 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறுகின்றது.
இன்று 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்.
அலிபூர்துவார், பன்குரா, பிர்பூம், கூச் பெஹார், தெற்கு தினாஜ்பூர், டார்ஜிலிங், ஜல்பைகுரி, ஜார்கராம், மால்டா, புருலியா, வடக்கு தினாஜ்பூர், மேற்கு மிட்னாபூர், கலிம்போங் உள்ளிட்ட நகரங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
முதல்முறை வாக்காளர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வாக்கினை செலுத்திவிட்டு அதுகுறித்த செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b