Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், மூத்த நடிகர் சிவகுமார் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிவகுமார் கூறியதாவது,
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக்கை ஒழிப்பதை முதன்மையான கொள்கையாகக் கொள்ள வேண்டும். மாநிலத்தின் இளைஞர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் தள்ளும் கொள்கைகளை எந்த அரசும் பின்பற்றக் கூடாது.
அதிகாரத்தில் இருக்கும்போது கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மதுவால் குடும்பங்கள் சிதைவதையும், இளைஞர்களின் உழைப்பு வீணாவதையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. மக்கள் நலனே ஆட்சியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், திரைப் பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகுமார் ஏற்கெனவே பல பொது மேடைகளில் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b