பத்ரிநாத் தாம் கோயில் நடை திறப்பு - உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்பு
உத்தரகாண்ட், 23 ஏப்ரல் (ஹி.ச) உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாத் தாம் கோயிலின் நடை, இன்று காலை 6:15 மணிக்கு பாரம்பரிய சடங்குகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சிறப்பு விருந
Badrinath Dham Temple Doors Open


உத்தரகாண்ட், 23 ஏப்ரல் (ஹி.ச)

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாத் தாம் கோயிலின் நடை, இன்று காலை 6:15 மணிக்கு பாரம்பரிய சடங்குகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவில் நடையை திறந்து வைத்தார்.

“ஹர் ஹர் மகாதேவ்” என்ற முழக்கங்கள் கோயில் வளாகம் முழுவதும் எதிரொலித்து, பக்திப் பரவசமான சூழலை உருவாக்கியது. யாத்திரை காலம் தொடங்குவதை முன்னிட்டு கோயில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,

இன்று பத்ரிநாத் தாம் நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை முழுமையாக தொடங்கியுள்ளது.

நான்கு தாம்களின் அருளாலும், பகவான் பத்ரி விசாலின் ஆசியாலும் சார் தாம் யாத்திரை பாதுகாப்பாகவும் நலமாகவும் அமையட்டும். யாத்திரைக்கான விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

பாபா பத்ரிநாத்தின் நடை திறப்பு நிகழ்வின் போது முதல்வர் தாமி, யாத்திரிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வை காண திரண்டிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b