Enter your Email Address to subscribe to our newsletters

பாராமதி, 23 ஏப்ரல் (ஹி.ச.)
முன்னாள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார், தனது தொகுதிக்கு செல்லும் வழியில் விமான விபத்தில் உயிரிழந்ததால், புனே மாவட்டத்தின் பாராமதி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்த வகையில் பாராமதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
மகாராஷ்டிரவின் தற்போதைய துணை முதல்வரும் அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா அஜித் பவார், பாராமதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக இன்று காலை கடேவாடி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சுனேத்ரா பவாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த் அஜித் பவாரும் உடன் சென்றிருந்தார். அவரும் ஜில்லா பரிஷத் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்து, தேர்தல் நடைமுறையில் பங்கேற்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனேத்ரா பவார்,
கடந்த 60 ஆண்டுகளாக பாராமதி மக்கள் ‘பவார்’ குடும்பத்துக்கு துணையாக நிற்கிறார்கள். தாதாவின் இல்லாமையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. பாராமதி மக்கள் அனைவரும் தாதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர், என்று கூறினார்.
வாக்களிப்பதற்கு முன்பாக, துணை முதல்வர் தனது மறைந்த கணவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாருக்கு பாராமதி கடேவாடியில் அஞ்சலி செலுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b