தமிழகத்திற்கு இது மிக முக்கியமான தேர்தல் - முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரபலங்கள் தாங்கள் ஜனநாயக கடமையாற்றியத
Former Indian cricketer Ravichandran Ashwin


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் பிரபலங்கள் தாங்கள் ஜனநாயக கடமையாற்றியதை சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சீதாராமன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அவருடன் அவரது மனைவி பிரிதி நாராயணனும் வாக்களித்தார்.

வரிசையில் காத்திருந்து வாக்களித்த அஸ்வின், வாக்களித்த பின் மையிடப்பட்ட விரலைக் காட்டி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

இது தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல். எனது உரிமையை நிலைநாட்ட வந்தேன்.

நான் எனது கடமையை செய்துவிட்டேன். இனி அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் தமிழகத்தின் முகத்தை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b