பாராமதி, ரகுரி தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் – வாக்களித்த பின் சுனேத்ரா பவார் வேண்டுகோள்
பாராமதி, 23 ஏப்ரல் (ஹி.ச.) மராட்டிய மாநிலத்தில் பாராமதி மற்றும் ரகுரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மராட்டிய துணை முதல்-மந்திரியாக உள்ள சுனேத்ரா பவார்,
M


பாராமதி, 23 ஏப்ரல் (ஹி.ச.)

மராட்டிய மாநிலத்தில் பாராமதி மற்றும் ரகுரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக உள்ள சுனேத்ரா பவார், கதேவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கை பதிவு செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். மேலும், எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுனேத்ரா பவாரின் கணவர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுனேத்ரா பவார், பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சுனில் தத்காரே, பிரபுல் பட்டேல், சகன் புஜ்பால், உதய் சமந்த், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சுப்ரியா சுலேவும் பங்கேற்றார்.

இதேபோன்று, அகல்யாநகர் மாவட்டத்தில் உள்ள ரகுரி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பங்கஜ முண்டே மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA