மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் - அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை
தூத்துக்குடி, 23 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததால், வாக்குச்சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
மு.கஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் - அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை


தூத்துக்குடி, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததால், வாக்குச்சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,77,004 பேர், பெண்கள் 7,10,981 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 201 பேர் அடங்குவர். ஆறு தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான கீதா ஜீவன், கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் (26.9%) வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அவர் தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான எஸ்.டி. செல்லப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டு முறை எம்எல்ஏவான கீதா ஜீவன், இன்று தூத்துக்குடியில் உள்ள கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன்,

தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார்.

என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சரைத் தொடர்ந்து, அவரது கணவரும் திமுக கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப் மற்றும் அவரது மகன் டாக்டர் மதில் ஜான் ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b