மிர்சாபூர் சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு
மிர்சாபூர், 23 ஏப்ரல் (ஹி.ச) உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று இரவு ஒரு லாரியானது கார் மீது மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 11 பேர் உயிரிழந்தனர். திராமண்ட்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு 8:30
மிர்சாபூர் சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு


மிர்சாபூர், 23 ஏப்ரல் (ஹி.ச)

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று இரவு ஒரு லாரியானது கார் மீது மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

திராமண்ட்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மிர்சாபூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொண்டைக்கடலை ஏற்றிச் சென்ற லாரியின் பிரேக் செயலிழந்ததால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த சோக விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும்

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b