Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 23 ஏப்ரல் (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டம் – குன்னம் தொகுதி
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 208-ல் கள்ள ஓட்டு தொடர்பான சர்ச்சையால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நல்லான் மகன் பரமசிவம் என்பவரின் வாக்கை, வேறு ஒருவர் போலி முறையில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வாக்காளர்கள் மற்றும் பூத் ஏஜென்டுகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற் கொண்டனர்.
வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜென்டுகள் இருந்தபோதிலும் கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான நிலைமையால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam