தவெகவில் இணைந்த பின் முதல்முறையாக வாக்களித்த செங்கோட்டையன்!
ஈரோடு, 23 ஏப்ரல் (ஹி.ச.) பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், குள்ளம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமை ஆற்றினார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று
Sengottaiyan


ஈரோடு, 23 ஏப்ரல் (ஹி.ச.)

பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், குள்ளம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமை ஆற்றினார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மக்களுடன் சேர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், குள்ளம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமை ஆற்றினார்.

தவெக-வில் இணைந்த பின்னர் அவர் முதல் முறையாக வாக்களிக்கிறார். அவர் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தொகுதியில் இதுவரை 8 முறை நின்று வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார். 1996 ஆம் ஆண்டைத் தவிர 1980 முதல் 2021 வரை அவர் இந்த தொகுதியில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிக் கண்டிருக்கின்றார்.

ஆகையால், இந்த தொகுதி அதிமுக-வின் கோட்டையாகவே அறியப்பட்டது. இந்த நிலையிலேயே சமீபத்தில் அதிமுக-வில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் தற்போது தவெக சார்பாக போட்டியிடுகின்றார்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து, வாக்காளர்கள் காலை முதலே வாக்கு சாவடிக்கு ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

குறிப்பாக இளைய தலைமுறையினர் வாக்காளர்கள் வருகை இம்முறை இந்த தொகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. வாக்கு சாவடிக்குள் செல்லும் வாக்காளர்கள் செல்போனை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்

Hindusthan Samachar / ANANDHAN