'ஏதோ ஓட்டு பிரியுது, மக்கள் மனம் பத்தி எரியுது’ - ’பஞ்ச்’ வசனம் பேசிய டி.ராஜேந்தர்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின்பு தனது கையில் மை வைக்கப்பட்டதை செய்தியாளர்களிடம் காண்பித்தார். வாக்கு செலுத்துவதை அலட்ச
T Rajendar


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வாக்கு செலுத்தினார்.

வாக்களித்த பின்பு தனது கையில் மை வைக்கப்பட்டதை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

வாக்கு செலுத்துவதை அலட்சியம் செய்யக் கூடாது. இளைய தலைமுறையினர் எந்த வேலையாக இருந்தாலும், ஒரு மணி நேரம் ஒதுக்கி தங்களது வாக்கை செலுத்த வேண்டும்.

நான் வரிசையில் நின்று தான் வாக்கு செலுத்தினேன். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 68, 69 வயது கொண்ட முதியோர்கள் வாக்களிப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

முதியோர்கள் தங்களது இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து பெரிதும் சிரமப்பட்டு வாக்களிக்கின்றனர், கடவுளுக்கு நன்றி.

”ஏதோ இந்த ஓட்டு பிரியுது, யாருக்கோ ஏதோ ஒன்னு சரியிது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரியுது” இவ்வாறாகத் தான் இந்த தேர்தலை நான் பார்க்கிறேன்.

வாக்குச்சாவடியில் இளைஞர்களை சிலரை பார்க்க முடிகிறது, இன்னும் ஓட்டு போடாத இளைஞர்கள் வந்து ஓட்டு போட்டு விடுங்கள்.

இன்றைய நிலையில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு குறைந்தது 20 முதல் 110 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

பதவியில் இருப்பவர்கள் பல லட்சக்கணக்கான கோடிகள் குவித்து வைத்துள்ளனர். தற்போது ஓட்டு போட சிலர் கரன்சியை தான் நம்புகிறார்கள் மக்களின் கரத்தை நம்பவில்லை என கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்ட மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த், மநீம தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா, நடிகர்கள் சந்தானம், சிபிராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் என பலர் தங்களது பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN