Enter your Email Address to subscribe to our newsletters

மன்னார்குடி, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கி, இரு மாநிலங்களிலும் மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
காலை 9 மணி நிலவரப்படி வெளியான ஆரம்பகட்ட வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 17.69 சதவீதமும், மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 18.76 சதவீதமும் பதிவாகியுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இன்று தனது சொந்த ஊரான மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாலிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா,
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான இந்தப் போரில் தமிழ்நாடு நிச்சயம் வெற்றி பெறும். 2024 தேர்தலை ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு பெருமளவு அதிகரித்துள்ளது.
இதற்கு திராவிட மாடல் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களே காரணம்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b