சென்னையில் தவெக தலைவர் விஜய் வாக்குப்பதிவு
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். 20
TVK Leader Vijay Casts Vote


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை நிறுவி நடிகர் விஜய் முதன்முறையாக போட்டியிடுகின்றார். அவரது கட்சி சார்பில் தமிழகத்தின் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் சென்னை - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை - நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

வழக்கமாகவே சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் நடிகர் விஜய் வாக்களிப்பார். இந்தமுறை தவெக தலைவராக வாக்களித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b