திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
திண்டுக்கல், 24 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT மற்றும் தேர்தல் உபகரணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வைப்பறையில் வைப்பத
க


திண்டுக்கல், 24 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT மற்றும் தேர்தல் உபகரணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வைப்பறையில் வைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர்,ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலை 1.30 மணி அளவில் திண்டுக்கல் முத்தனம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டு இயந்திரங்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டன.

Hindusthan Samachar / Durai.J