Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று 2 மாநில தேர்தலுக்கு மத்தியிலும் அதிரடியாக குறைந்தது.
அந்த வகையில் நேற்று (ஏப்.23) நிலவரப்படி ஒரு கிராம் ரூ.14,160க்கும், ஒரு சவரன் ரூ.1,13,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 24) மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்திருக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P