Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 24 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக கொல்கத்தா நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூக்ளி நதியில் படகில் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது படகோட்டிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் கடின உழைப்பை பாராட்டினார்.
மேலும், ஒரு படகோட்டியை கட்டியணைத்து ரூ.1000 வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று காலை ஹூக்ளி நதி கரையில் சிறிது நேரம் கழிக்க வாய்ப்பு கிடைத்தது.
அன்னை கங்கை மீது நன்றியுணர்வு தெரிவிக்க இது ஒரு சிறந்த தருணமாக அமைந்தது. படகோட்டிகளை சந்தித்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது.
மேலும், காலை நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களையும் சந்தித்தேன்.
ஹூக்ளி நதி கரையில் அமைதியான மற்றும் நினைவில் நிற்கும் காலைப் பொழுது அமைந்தது.
இந்த மாபெரும் நதியின் அழகை புகைப்படமாக பதிவு செய்ய முயன்றேன்.
அப்போது வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலம் ஆகியவை கண்கவர் தோற்றத்தில் காட்சியளித்தன.
மேற்கு வங்க மக்களின் இதயங்களில் கங்கை நதி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த தெய்வீக நீர் ஒரு நாகரிகத்தின் காலத்தால் அழியாத ஆன்மாவை தாங்கிச் செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA