டெல்லியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் – போலீசார் தீவிர விசாரணை
புதுடெல்லி, 24 ஏப்ரல் (ஹி.ச.) மத்திய டெல்லியின் பரபரப்பான கரோல் பாக் பகுதியில் உள்ள ஃபைஸ் சாலையில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார். கல்கா தாஸ் சௌக் அருகே அதிகாலை 2:30 மணி முதல் 3:00 மணிக்குள் இந்த சம்பவம் நடந்
One Injured in Karol Bagh Shooting


புதுடெல்லி, 24 ஏப்ரல் (ஹி.ச.)

மத்திய டெல்லியின் பரபரப்பான கரோல் பாக் பகுதியில் உள்ள ஃபைஸ் சாலையில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

கல்கா தாஸ் சௌக் அருகே அதிகாலை 2:30 மணி முதல் 3:00 மணிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது .

தகவல் கிடைத்ததும் டெல்லி போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.

காயமடைந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபைஸ் சாலை பகுதி கரோல் பாக்கின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாகும். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்தும் போலீஸார் தகவல் திரட்டி வருகின்றனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்வதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b