கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி , 24 ஏப்ரல் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்
Modi extends birthday wishes to Goa


புதுடெல்லி , 24 ஏப்ரல் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

கோவாவின் வளர்ச்சியை பல்வேறு துறைகளில் முன்னெடுத்துச் செல்வதில் அவர் முன்னணியில் உள்ளார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த முதல்வர் சாவந்த், நாட்டின் மற்றும் கோவாவின் வளர்ச்சிப் பாதைக்கு பிரதமர் மோடியின் தலைமைதான் காரணம் எனப் புகழாரம் சூட்டினார்.

மனோகர் பாரிக்கரின் மறைவைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வை வெற்றிபெறச் செய்து மீண்டும் முதல்வராகத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b