சுற்றுலா தளங்களைப் பார்வையிட இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
திண்டுக்கல், 24 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
Permission to Visit Tourist Sites from Today


திண்டுக்கல், 24 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களும் ஏப்ரல் 23(நேற்று) மூடப்படும் எனவும் மேலும் கோவையின் கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இதே போல் ஊட்டியில் முக்கிய சுற்றுலாத் தலங்களும் தேர்தலன்று இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு இன்று முதல் (24.04.2026) சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி என வனத்துறை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Hindusthan Samachar / vidya.b