மும்பையில் பழைய பொருள் கடைகளில் திடீர் தீ விபத்து
மும்பை , 24 ஏப்ரல் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மன்குர்த் மண்டலாவில் உள்ள ஜி.எம். லிங்க் சாலை பரபரப்பான பகுதி ஆகும். இச்சாலையின் ஏக்தா நகரில் அமைந்துள்ள குர்லா ஸ்கிராப் டீலர்ஸ் பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் கடைகள் இயங்கி வருகின்றன
மும்பையில் பழைய பொருள் கடைகளில் திடீர் தீ விபத்து


மும்பை , 24 ஏப்ரல் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மன்குர்த் மண்டலாவில் உள்ள ஜி.எம். லிங்க் சாலை பரபரப்பான பகுதி ஆகும். இச்சாலையின் ஏக்தா நகரில் அமைந்துள்ள குர்லா ஸ்கிராப் டீலர்ஸ் பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் கடைகள் இயங்கி வருகின்றன.

இக்கடையில் இன்று அதிகாலை 5:04 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரிஹன்மும்பை மாநகராட்சியின் மும்பை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படை, காவல்துறை, ஆம்புலன்ஸ் சேவைகள், மின்சார விநியோக நிறுவனம், பொதுப்பணித்துறை மற்றும் பிரிஹன்மும்பை மாநகராட்சி வார்டு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீயணைப்பு பணிகளைத் தொடங்கினர்.

தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தரைத்தளத்தில் உள்ள நான்கு முதல் ஐந்து பழைய பொருள் கடைகளில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாதிக்கப்பட்ட கடைகளுக்குள் யாரும் சிக்கிக்கொள்ளவில்லை என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b